அருண் விஜய், ரெஜினா நடிக்கும் த்ரில்லர் படம் - சீக்ரெட்டை வெளியிட்ட படக்குழு!

அருண் விஜய், ரெஜினா நடிக்கும் த்ரில்லர் படம் - சீக்ரெட்டை வெளியிட்ட படக்குழு!
அருண் விஜய் 31 படக்குழு
  • Share this:
அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கவிருக்கிறது.

கோலிவுட்டில் தனது 25-வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வகையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலைக் குவித்து வெற்றிப் படமாக அமைந்தது.

இத்திரைப்படத்தை அடுத்து அக்னி சிறகுகள், சினம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் அருண் விஜய், ‘குற்றம் 23’ பட இயக்குநருடன் பெயரிப்படாத தனது 31-வது படத்திலும் நடித்து வருகிறார்.


‘AV31’ என்று அறியப்படும் இந்தப் படத்துக்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவும் அருண் விஜய் தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 15 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்ட படப்பிடிப்பில் டெல்லி, ஆக்ரா  உள்ளிட்ட இடங்களில் அதிரடி சண்டைக் காட்சிகளும்,  யமுனை நதிக்கரை, ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இத்திரைப்படத்தில் முதல் முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. மேலும் மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: விஜய்க்கு சொன்ன கதையில் சிம்பு? தடம் மாறுகிறதா ‘தளபதி 65’ பிளான்!
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading