நடிகர் அருண் விஜய்யின் ஓ மை டாக் திரைப்படம் வரும் ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள oh my dog நடித்துள்ள என்ற குழந்தைகள் திரைப்படத்தை அமேசான் பிரைம் வலைதளத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சண்முகம் இயக்கியுள்ள இந்த படத்தில் மஹிமா நம்பியார், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்னவிற்கு தந்தையாக இதில் அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.
நடுவர் குழு பாரபட்சமானது - விஜய் டிவியை வெளுத்து வாங்கி சவால் விட்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. பொன்மகள் வந்தாள், சூரரைப்போற்று, ஜெய்பீம், உடன் பிறப்பே, ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் அமேசான் தளத்தில் வெளியிடும் திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவர உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.