முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்தப் படத்தில் விஜய்யுடன் இணையும் அருண் விஜய்?

அடுத்தப் படத்தில் விஜய்யுடன் இணையும் அருண் விஜய்?

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

விஜய் - அருண் விஜய் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிட உள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அருண் விஜய் கடைசியாக நடித்த படம் ‘யானை’. ஹரி இயக்கிய இந்தப் படத்தில், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை அருண் விஜய் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும், முழு படமும் லண்டன் மற்றும் இங்கிலாந்தில் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் - அருண் விஜய் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிட உள்ளனர். தவிர இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய் பீம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்குனர் ஏ.எல்.விஜய், அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களையும் இயக்கியுள்ளார்.

First published:

Tags: Actor Arun Vijay, Tamil Cinema