• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தீபாவளிக்கு அண்ணாத்தயுடன் மோதும் அருண் விஜய் படம்

தீபாவளிக்கு அண்ணாத்தயுடன் மோதும் அருண் விஜய் படம்

வா டீல்

வா டீல்

சுமார் 9 வருடங்களுக்குமுன் அருண் விஜய் நடிப்பில் டீல் என்ற படம் தொடங்கப்பட்டது.

  • Share this:
    தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த வலிமை தீபாவளி போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, யாரும் எதிர்பார்க்காத அருண் விஜய்யின் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

    அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம் படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதில் பார்டர் நவம்பர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. நவீனின் அக்னிசிறகுகள் படத்தின் போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஹரியின் யானை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.. இவை தவிர ஓ மை டாக், பாக்ஸர் ஆகிய படங்களும் அருண் விஜய் கைவசம் உள்ளன.

    தீபாவளிக்கு வெளியாவது மேலே சொன்னப் படங்களில் எதுவும் இல்லை. சுமார் 9 வருடங்களுக்குமுன் அருண் விஜய் நடிப்பில் டீல் என்ற படம் தொடங்கப்பட்டது. தமிழில் பெயர் இருந்தால் மட்டுமே வரிவிலக்கு என்பதால் வா என்று பெயர் வைத்து அதன் கீழே உப தலைப்பு போல் டீலை போட்டுக் கொண்டனர். சிவஞானம் என்பவர் இயக்கம். ராதாவின் மகள் கார்த்திகா நாயகி.

    இந்தப் படம் இதுவரை வெளியாகாமலே உள்ளது. பலமுறை பலர் முயற்சி செய்தும் படத்தை வெள்ளித்திரைக்கு கொண்டுவர முடியவில்லை. தற்போது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் வா டீல் படத்தை வெளியிடுகிறது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவஞானம் என்ற பெயரில் படத்தை தொடங்கிய இயக்குனர் பிறகு ரத்தின சிவா என்று தனது பெயரை மாற்றி, விஜய் சேதுபதியின் றெக்கை உள்ளிட்ட படங்களை இயக்கியது தனிக்கதை.

    Arun Vijay movie clashes with Rajinikanth  Annaatthe for Diwali, Arun Vijay Vaa Deal, Vaa Deal release, Vaa Deal arun vijay, அருண் விஜய் வா டீல், vaa deal online watch, vaa deal full movie download, vaa deal tamil movie download tamilrockers, vaa deal full movie, vaa deal movie download moviesda, vaa deal tamilyogi, vaa deal ott release date, vaa deal full movie download in isaimini, வா டீல் வெளியீடு, வா டீல் அருண் விஜய், அருண் விஜய் வா டீல், வா டீல் ஆன்லைன்
    வா டீல்


    தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. முதலில் அறிவித்த அண்ணாத்தயே தள்ளிப்போகும் என்ற வதந்தி நிலவுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், வா டீலும் தீபாவளிக்கு வந்தால் தான் கணக்கு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: