முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அருண் விஜய்யின் லுக்கையே மாற்றிய பாலா - லீக்கான வணங்கான் படப்பிடிப்பு போட்டோ

அருண் விஜய்யின் லுக்கையே மாற்றிய பாலா - லீக்கான வணங்கான் படப்பிடிப்பு போட்டோ

அருண் விஜய் - சூர்யா - பாலா

அருண் விஜய் - சூர்யா - பாலா

வணங்கான் படத்தில் தற்போது அருண் விஜய்யை நாயகனாக வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பாலா. நாயகியாக க்ரித்தி ஷெட்டிக்கு பதில் ரோஷினி பிரகாஷ் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கில் பாஸிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ்வை வைத்து இயக்குநர் பாலா ரீமேக் செய்திருந்தார். ஆனால் அந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கு திருப்தியளிக்காததால் மீண்டும் இயக்குநர் கிரீஸாயாவை வைத்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

இதற்கடுத்து படம் இயக்காமல் இருந்த பாலா நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுடன் வணங்கான் படத்தில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு இயக்குநர் பாலா, சூர்யா இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் சூர்யா - இயக்குநர் பாலாவுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது.

வணங்கான் படத்தில் அருண் விஜய்

கதையில் நிகழ்ந்த சில மாற்றங்கள் சூர்யாவுக்கு பொறுத்தமாக இல்லாததால் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஒரு மனதாக முடிவெடுத்தோம் என்றும் வேறு நடிகரை வைத்து அந்தப் படத்தை தொடரவிருப்பதாகவும் இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதற்கேற்ப இந்தப் படத்தில் தற்போது அருண் விஜய்யை நாயகனாக வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பாலா. நாயகியாக க்ரித்தி ஷெட்டிக்கு பதில் ரோஷினி பிரகாஷ் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் ஓரே விஷயம்... - லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் பதிவு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்தப் படத்தில் அருண் விஜய்யின் லுக் சமீபத்தில் வைரலானது. சூர்யாவை விட வணங்கான் லுக்கில் அருண் விஜய் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Actor Arun Vijay, Director bala