Home /News /entertainment /

உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் வெளியாகிறது யானை திரைப்படம்

உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் வெளியாகிறது யானை திரைப்படம்

அருண் விஜய்

அருண் விஜய்

தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு ஊர்களில் மக்களை நேரடியாக சந்தித்ததாகவும், அவர்கள் கொடுத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாகவும் அருண் விஜய் கூறினார்.

  • News18
  • Last Updated :
யானை திரைப்படம் உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் வெளியாகிறது என அருண் விஜய் கூறியுள்ளார்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் யானை திரைப்படம் 1-ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் ஹரி, நடிகர் அருண் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல குழுவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், யானை திரைப்படம் உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை பார்த்து திரும்பும் ரசிகர்கள் மனது கனமாக இருக்கும் என தெரிவித்தார். அதே போல் தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு ஊர்களில் மக்களை நேரடியாக சந்தித்ததாகவும், அவர்கள் கொடுத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாகவும் கூறினார்.





அதேபோல் இயக்குனர் ஹரி பேசுகையில், மக்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முழுவதும் சென்றதாக கூறினார்.  மேலும் யானை படத்தின் முதல் ட்ரெய்லரை தன்னுடைய வழக்கமான பார்முலாவிலிருந்து வேறுபட்டு, உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகியதாக தெரிவித்தார்.

Also read... நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஆனால் இந்த இரண்டாவது ட்ரெய்லரை தன்னுடைய வழக்கமான பார்முலாவில் கொடுக்கவேண்டும் என்று இன்று வெளியிடுவதாக கூறினார். யானை திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

அவர் பேசுகையில்,  தனக்கு தென்மாவட்ட  இசையை படம் முழுவதும் அமைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அது அசுரன் மூலமாக நிறைவேறியது. அதைத் தொடர்ந்து தற்போது யானை படம் தனக்கு அமைந்ததாகவும்,  அதற்காக தனி கவனம் செலுத்தி இசை அமைத்ததாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Arun Vijay

அடுத்த செய்தி