அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் மறைவு

மோகன் - அருண் விஜய்

உடல்நிலை சரியில்லாமல் இருந்த என்.எஸ்.மோகன் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 • Share this:
  நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகனின் மறைவு அவரது குடும்பத்தினரிடமும், திரையுலகினரிடமிம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  என். எஸ். மோகன் அருண் விஜய் நடித்த 'மலை மலை', 'மாஞ்சா வேலு', 'தடையற தாக்க' ஆகியப் படங்களை தயாரித்துள்ளார். மோகனுக்கு மனைவி சுசில் மோகன், மகன் ஹேமந்த் மற்றும் மகள் ஆர்த்தி, மருமகன் அருண் விஜய் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

  உடல்நிலை சரியில்லாமல் இருந்த மோகன் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் அரசு வெளியிட்டுள்ள கொரோனா நெறிமுறைகளுடன் மோகனின் வீட்டுக்கு சென்று தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: