தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், பேரன் அர்ணவ் விஜய் என 3 தலைமுறையினர் ஒன்றாக நடித்த 'ஓ மை டாக்' கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் விஜயகுமார் சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறார்.
அருண் விஜய் நடித்த 'சினம்' படத்தை விஜயகுமார் தயாரித்திருந்தார். அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் அருண் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகுமாருக்கு உடல்நிலை சரியில்லை என வதந்தி பரவியது.
இதையும் படிக்க | வசீகரத்தால் பெண்களை ஏமாற்றி கொன்ற கொடூரன்: ஓடிடியில் வெளியான நிஜ 'மன்மதனின் கதை
இதனையடுத்து அவரது மகனும் நடிகருமான அருண் விஜய் தனது தந்தையின் உடல்நிலை குறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ''என்னுடய நண்பர்கள், ரசிகர்களுக்கு, அப்பா வீட்டில் நலமாக இருக்கிறார். தயவுசெய்து வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி'' என்று கூறி விஜயகுமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
1961 முதல் நடித்து வரும் நடிகர் விஜயகுமார் தமிழ் மற்றும் தெலுங்கில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்துவந்த விஜயகுமார், கம்பீரமான வேடம் என்றால் இயக்குநர்களுக்கு அவரது பெயர் ஞாபகம் வரும் அளவுக்கு தனது நடிப்பால் முத்திரை பதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.