பிறந்தநாளில் ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்வித்த அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளில் ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்வித்த அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்
  • News18 Tamil
  • Last Updated: November 21, 2020, 10:27 AM IST
  • Share this:
1995-ம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண் விஜய். விஜயகுமார் என்ற பிரபல நடிகரின் மகனாக திரையில் அறிமுகமானாலும் அருண் விஜய்க்கு சினிமா எளிதில் வசப்படவில்லை. தொடர்ந்து தனது கடின உழைப்பால் திரைத்துறையில் போராடி வந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அஜித்துக்கு வில்லனாக நடித்து ‘விக்டர்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் ஆழமாக பதிந்த அருண் விஜய், அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு தமிழில் வெளியான ‘மாஃபியா’ படத்தின் மூலம் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் விஜய், நவம்பர் 19-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)


இந்நிலையில் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியிருக்கும் அருண் விஜய், அதன் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இவர்களின் புன்னகையை பார்ப்பது, விருப்பங்களை நிறைவேற்றுவது எனது பிறந்தநாளின் சிறந்த தொடக்கமாகும். இது என் மனதை முழுமையாக்குகிறது. உங்களது வாழ்த்துகள், ஆசிர்வாதங்களுக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’, சினம் ஆகிய படங்கள் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading