Home /News /entertainment /

ரசிகர்களின் பல நாள் காத்திருப்பு.. அருண் விஜய் ’பார்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரசிகர்களின் பல நாள் காத்திருப்பு.. அருண் விஜய் ’பார்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பார்டர்

பார்டர்

அருண் விஜயின் பார்டர் திரைப்படம் பிரச்சனைகளை கடந்து திரைக்கு வருகிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அருண் விஜய் நடித்திருக்கும் பார்டர் திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது. 

குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பார்டர். இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தாலும்,  தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படம் திரைக்கு வராமல் இருந்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தை இரண்டு நிறுவனங்களுக்கு விநியோக உரிமையை தயாரிப்பாளர் கொடுத்தார் என்றும், அதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பிரச்சனைகள் நடைபெற்று வந்ததாக திரைத்துறையில் கூறுகின்றனர்.

மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரச்சனை நீடித்து வந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பார்டர் திரைப்படத்தை அக்டோபர் 5-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு Oh My Dog, யானை, தமிழ் ராக்கர்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன.  இதை அடுத்து விரைவில் சினம் திரைப்படம் வெளியாகிறது.  அதைத்தொடர்ந்து பார்டர் வெளியாக உள்ளது. இதன் காரணமாக அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 5 திரைப்படங்கள் வெளியாகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Arun Vijay, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி