Home /News /entertainment /

அருண் விஜயின் ‘பார்டர்’.. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது

அருண் விஜயின் ‘பார்டர்’.. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது

பார்டர் திரைப்படம்

பார்டர் திரைப்படம்

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

    என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்ததன்  மூலம்  நடிகர் அருண் விஜய்  மார்க்கெட் எகிறியது. அதன் பின்பு மோஸ்ட் வான்டட் நடிகராக அருண் விஜய் வலம் வந்தார். குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றது. சமீபத்தில்  ஹரி இயக்கத்தில்  யானை திரைப்படம் வெளியானது.இதில் ப்ரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் படமாக யானை படம் அமைந்தது.



    ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த தேதியில் வெளியாக இருந்த விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது.



    also read : நடிகர் பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் ஓ.டி.டி. தேதி ரிலீஸ் அறிவிப்பு

    இதனால் ஆகஸ்ட் 31ஆம் தேதியை பார்டர் திரைப்படக் குழு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.  அதே தேதியில் மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 திரைப்படம் வெளியாகிறது.  இருந்தாலும் இந்த இரண்டு திரைப்படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்டர் திரைப்படத்தில் அருண் விஜய் உடன் ரெஜினா நாயகியாக நடிக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor Arun Vijay

    அடுத்த செய்தி