Arun Vijay: திரையரங்கில் வெளியாகும் அருண் விஜய்யின் ‘பார்டர்’ - ரசிகர்கள் மகிழ்ச்சி!

அருண் விஜய்

இன்னும் சில வாரங்களில் சகஜநிலை திரும்பி, திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

  • Share this:
    அருண் விஜய் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் பார்டர், திரையரங்கில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதனால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொரோனா முதல் அலையில் மாதக்கணக்கில் ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு பல வாரங்களுக்குப் பிறகே திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. கொரோனா இரண்டாம் அலை முதல் அலையைவிட உக்கிரமாக இருந்ததால், இந்த வருடம் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தனர். இதனால், பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியை நோக்கி நகர்ந்தன. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் பார்டர் திரைப்படமும் ஓடிடி வெளியீட்டுக்கு தயாரானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக விரைவாக இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் சகஜநிலை திரும்பி, திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. இதனால், பெரிய பட்ஜெட் படங்கள் யு டர்ன் அடித்து திரையரங்கை நோக்கி திரும்பியுள்ளன. பார்டர் படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பு தரப்பு உறுதி அளித்துள்ளதால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருக்கும் இந்தப் படத்தின் பின்னணி இசை வேலைகளை சாம் சிஎஸ் ஏற்கனவே முடித்துவிட்டார். அதனால், ஆகஸ்ட் 12-ம் தேதி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: