மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கியிருக்கும் படம் அக்னி சிறகுகள். அருண் விஜய், விஜய் ஆண்டனி முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நவீன்.
நவீன் எழுதி, இயக்கி, நடித்த மூடர்கூடம் தமிழின் நவீன சினிமாக்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 2013 இல் இந்தப் படம் வெளியான பிறகு கொளஞ்சி என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற பேண்டஸி த்ரில்லரை இயக்கினார். அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. அதையடுத்து அக்னி சிறகுகள் படத்தை அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கினார். படம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. சுருக்கமாகச் சொன்னால், 2013 இல் வெளியான முதல் படத்திற்குப் பிறகு இதுவரை நவீன் இயக்கத்தில் அடுத்தப் படம் வெளியாகவில்லை. அக்னி சிறகுகள்தான் இரண்டாவது படமாக வெளியாக உள்ளது.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா அக்னி சிறகுகளை தயாரித்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ட்ராயன், சதீஷ்குமார் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் எடுக்கப்பட்ட சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகள் அக்னி சிறகுகளின் சிறப்பும்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹாலிவுட் ஸ்டண்ட் கோஆர்டினேட்டர் விக்டர் இவானோ இந்தச் சண்டைக் காட்சிகளை அமைத்தார்.
பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!
அக்னி சிறகுகள் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட சிஜி பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் எனவும் பாஸிட்டிவான அப்டேட்டை இயக்குனர் நவீன் தந்துள்ளார். அருண் விஜய் நடிப்பில் பார்டர், சினம், யானை என பல படங்கள் வெளியாக வரிசைக்கட்டி நிற்கின்றன. அதில் அக்னி சிறகுகள் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் என நம்பலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.