அருண் விஜய் படத்தில் ரெஜினா... அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்புகள்...!

அருண் விஜய் படத்தில் ரெஜினா... அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்புகள்...!
நடிகர் அருண் விஜய்
  • Share this:
அருண் விஜய்யின் 31-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் இணைந்துள்ளார். இந்தக் ‘குற்றம் 23’ படத்தில் ஏற்கெனவே இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைகிறது.

ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டுள்ளது.


ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரெஜினா ஜோடியாக நடிக்கிறார். இவருடன் மற்றொரு நடிகையான ஸ்டெஃபி படேல் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் பிரபல குணச்சித்திர நடிகர் பகவதி பெருமாளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க: 'குயின்' வெப் சீரிஸ்க்கு தடை கோரி மனு... கவுதம் மேனனுக்கு நீதிமன்றம் உத்தரவு...!

படப்பிடிப்பு ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது. முன்னதாக அருண் விஜய் நடிப்பில் அக்னிச் சிறகுகள், மாஃபியா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்