Home /News /entertainment /

இன்றைய கால நடிகர்களை விமர்சித்த அருண் பாண்டியன்

இன்றைய கால நடிகர்களை விமர்சித்த அருண் பாண்டியன்

அருண் பாண்டியன்

அருண் பாண்டியன்

நடிகர் அருண்பாண்டியன் தன்னை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது என கூறியுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் அவன் என்ன பண்றான்? இவன் என்ன பண்றான்? என தான் நடிகர்கள் கேட்கிறார்கள் என அருண் பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் அருண்பாண்டியன் தன்னை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது என கூறியுள்ளார். அதர்வா நடித்துள்ள ட்ரிகர் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அருண் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என எதாவது ஒரு வகையில் சினிமாவுடன் நான் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன்.  சமீபத்தில் நான் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறேன், கதை பிடித்தால் மட்டுமே நான் நடிக்கிறேன்.

நிறைய பேர் அதிக பணம் தருகிறோம் என்று கேட்டார்கள். ஆனால் அதை நான் மறுத்து விட்டேன் எனக் கூறினார். அத்துடன் நான் பணம் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல எனவும் கூறினார். கதை நல்லா இருந்தால் நடிப்பேன், முதல் படத்திற்காக சொத்தை எல்லாம் விட்டுவிட்டு வந்தவன் நான், எனவும் அருண்பாண்டியன் தெரிவித்தார்.

உன் மாஸ்டர் பிளான் எனக்குத் தெரியும்... ரவீந்தருக்கு வனிதா விஜயக்குமார் கொடுத்த அட்வைஸ்!

Arun Pandian criticized today actors in trigger press meet, arun pandian - wikipedia, arun pandian family, arun pandian young, arun pandian ramya pandian, arun pandian daughter, arun pandian and ramki movies, arun pandian falls, arun pandian daughter movie, Atharvaa is Junior Captain - says Chinni Jayanth, Actor Chinni Jayanth, சின்னி ஜெயந்த், நடிகர் சின்னி ஜெயந்த் மகன், chinni jayanth movies, chinni jayanth comedy, chinni jayanth son ias, atharvaa new movie 2022, atharvaa age, atharvaa father, atharvaa phone number, atharvaa twitter, atharvaa instagram, atharvaa family, நடிகர் அதர்வா, ட்ரிகர் படம்
ட்ரிகர் பிரஸ் மீட்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இந்தப் படத்தில் நடித்த அதர்வாவை பாராட்டுகிறேன். இது சிறப்பான கதை, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதற்கு மறுப்பு சொல்லாமல் நடித்தார். இன்றைய காலகட்டத்தில் உள்ள நடிகர்கள் அவன் என்ன பண்றான்? இவன் என்ன பன்றான்? என்று கேட்கிறார்கள். ஆனால் அதர்வா அப்படி கிடையாது என பாராட்டினார். ட்ரிகர் திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி