அருண் மாதேஸ்ரன் இயக்கத்தில் பாரதிராஜா வசந்த் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான படம் ராக்கி. சரியாக ஓராண்டுக்கு முன் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களைக் குவித்தது. தமிழ் ரசிகர்களுக்கு புதுவிதமான காட்சி அனுபவமாக ராக்கி அமைந்தது.
இதனைத் தொடர்ந்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இப்படம் ராக்கி போல் அல்லாமல் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்தப் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்த தனுஷ், அருண் மாதேஸ்வரனுடன் இணைவதாக அறிவித்தார்.
அதற்கேற்ப கேப்டன் மில்லர் என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. கூடுதலாக இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வேறு நடிக்கிறார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதிஷ் என பெரும் நட்சத்திர பட்டாளாமே நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
😳 idhu eppo?? https://t.co/xlwhF0GSy8
— Arun Matheswaran (@ArunMatheswaran) December 21, 2022
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்றுவருவதாக அப்டேட் கொடுத்தார். இதனைப் பார்த்து ஷாக்கான இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ''இது எப்போ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhanush, G.V.Prakash, Priyanka Mohan