ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

3 இடியட்ஸ் நடிகர் அருண் பாலி திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

3 இடியட்ஸ் நடிகர் அருண் பாலி திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

அருண் பாலி

அருண் பாலி

2000-களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார் அருண் பாலி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  3 இடியட்ஸ், கேதார்நாத், பானிபட் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் அருண் பாலி இன்று (அக்டோபர் 7) மும்பையில் காலமானார்.

  இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவருக்கு அரிதான நீண்ட கால நரம்புத்தசை நோயான மயஸ்தீனியா கிராவிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் அவர் மும்பையில் காலமான செய்தி, அவரது ரசிகர்களையும், குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  பாலியின் மகன் அங்குஷ், தனது தந்தை நரம்புகள் மற்றும் தசை செயலிழப்பினால் ஏற்படும் மயஸ்தீனியா கிராவிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார். பின்னர் அவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானதாகவும் தெரிவித்தார்.

  முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாள் - செவ்வந்தி சீரியல் நடிகை மீது அர்னாவ் குற்றச்சாட்டு

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2000-களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார் அருண் பாலி. அதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றார். தேசிய விருது பெற்ற தயாரிப்பாளராகவும் இருந்தார். ஆகஸ்ட் 11, 2022 அன்று வெளியான லால் சிங் சத்தா படத்தில் ரயிலில் இடம்பெற்ற வயதான மனிதராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bollywood