ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராட்சசி பட இயக்குநருடன் இணைந்த அருள்நிதி...!

ராட்சசி பட இயக்குநருடன் இணைந்த அருள்நிதி...!

அருள்நிதி

அருள்நிதி

அருள்நிதி தற்போது இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி'படத்திலும், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'தேஜாவு' படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ராட்சசி படத்தின் இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கும் படத்தில் அருள்நிதி அடுத்ததாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தை கவுதம்ராஜ் இயக்கியிருந்தார். ராட்சசி படத்தை தொடர்ந்து மீண்டும் ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்க அவர் தயாரானார். ஆனால் ஜோதிகா தற்போது நடிக்காமல் ஓய்வில் உள்ளார். இதனால் அருள்நிதி நடிக்கும் படத்தை இயக்க கவுதம்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்தப் படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது என கூறப்படுகிறது. அதற்கான தோற்ற புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அருள்நிதி - கவுதம்ராஜ் இணையும் அந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகி துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Also read... சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்... நடிகர் சல்மான் கானிற்கு மிரட்டல் கடிதம்

அருள்நிதி தற்போது இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி'படத்திலும், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'தேஜாவு' படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த மூன்று படங்களின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment