Home /News /entertainment /

கமல், விக்ரம், அமீர் கான் வெளியிட்ட அருள்நிதியின் டைரி ட்ரைலர்!

கமல், விக்ரம், அமீர் கான் வெளியிட்ட அருள்நிதியின் டைரி ட்ரைலர்!

டைரி ட்ரைலர்

டைரி ட்ரைலர்

சென்னையில் நடந்த ரெட் ஜெயண்ட் மூவீஸின் 15-ம் ஆண்டு விழா நிகழ்வில் உலகநாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் அருள்நிதியின் டைரி பட டிரெய்லரை வெளியிட்டனர்.

    நடிகர் அருள்நிதியின் டைரி படத்தின் ட்ரைலரை நடிகர்கள் கமல் ஹாசன், விக்ரம், அமீர் கான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

    நடிகர் அருள்நிதி த்ரில்லர் படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் நடிப்பில் உருவான குற்றப் புலனாய்வு திரில்லர் படமான 'தேஜாவு' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர், டைரக்டர் இன்னாசி பாண்டியனின் டைரி படத்தில் நடித்துள்ளார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. திங்கட்கிழமை சென்னையில் நடந்த ரெட் ஜெயண்ட் மூவீஸின் 15-ம் ஆண்டு விழா நிகழ்வில் உலகநாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் அருள்நிதியின் டைரி பட டிரெய்லரை வெளியிட்டனர்.

    சினிமாவில் 13 வருடங்களை நிறைவு செய்த ஷ்ருதி ஹாசன்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ட்ரைலர் அரசு பேருந்தின் வினோதமான காட்சியுடன் தொடங்குகிறது. கோயம்புத்தூர் - ஊட்டி செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்துகள் நடப்பதுதான் கதை என்று தெரிய வருகிறது. இந்தப் படத்தில் அருள்நிதி போலீஸ்காரராக நடித்துள்ளார். அங்கு நடக்கும் விபத்துக்கள் மற்றும் பஸ்ஸைச் சுற்றியுள்ள மர்மத்தை அவிழ்க்கும் முயற்சியில் இறங்குகிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aamir Khan, Actor Vikram, Kamal Haasan

    அடுத்த செய்தி