டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு வெளியான ஹாரர் த்ரில்லர் படமான டிமாண்டி காலனியின் இரண்டாம் பாகம் உருவாகும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'வெஞ்சன்ஸ் ஆஃப் தி அன்ஹோலி' என்ற டேக்லைனுடன் டிமாண்டி காலனி 2-ன் புதிய போஸ்டரை அவர்கள் வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்தைப் போலவே, இதன் இரண்டாம் பாகத்தையும் 6இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் அவர் இருக்கிறார்.
டிமாண்டி காலனியின் முதல் பாகத்தில் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமானார். அதில் அருள்நிதி தமிழரசு, ரமேஷ் திலக், சனந்த், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமாண்டி காலனி பகுதியில் நடக்கும் கற்பனைக் கதையாக இயக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதிதாக பிரியா பவானி சங்கர் இதில் இணைந்துள்ளார். முதல் படத்தின் நடித்த மற்ற நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் இருப்பார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
#DemonteColony2 shoot begins!#DC2 #VengeanceOfTheUnholy@AjayGnanamuthu @SamCSmusic @priya_Bshankar pic.twitter.com/Jdr2CzbSGg
— Arulnithi tamilarasu (@arulnithitamil) November 30, 2022
ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?
டிமாண்டி காலனி 2-ம் பாகத்தில் இசையமைப்பாளராக சாம் சிஎஸ் மற்றும் ஒளிப்பதிவாளராக தீபக் டி மேனன் ஆகியோர் பணியாற்ற, குமரேஷ் மற்றும் ரவி பாண்டி முறையே எடிட்டிங் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை கையாள்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema