ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

டிமாண்டி காலனி 2

டிமாண்டி காலனி 2

அருள்நிதி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் அஜய் ஞானமுத்து, டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதோடு, ஒரு திகில் திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் பெற்றிருப்பதாக விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. தமிழ் சினிமாவில் திகில் வகைக்கு ஒரு புதிய அளவுகோலை உருவாக்கிய படமாக கருதப்படும் இந்த படத்தில், நம்பிக்கைக்குரிய நடிப்பை வழங்கிய நடிகர் அருள்நிதி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓரிடம் பிடித்தார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்குவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 'வெஞ்சன்ஸ் ஆஃப் தி அன்ஹோலி' என்ற டேக்லைனுடன் டிமாண்டி காலனி 2-ன் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே, இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் அவர் இருக்கிறார்.

விஜய்யுடன் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த வில்லன் நடிகர்!

அருள்நிதி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் ஷெட்யூல் ஓசூரில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த ஷெட்யூலில் படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema