Home /News /entertainment /

இந்தமுறை நான் அடிக்குற அடி.. மரண அடி... மாஸ் ஆக்ஷனுடன் வெளியான தி லெஜண்ட் ட்ரைலர்

இந்தமுறை நான் அடிக்குற அடி.. மரண அடி... மாஸ் ஆக்ஷனுடன் வெளியான தி லெஜண்ட் ட்ரைலர்

தி லெஜண்ட்

தி லெஜண்ட்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

    லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அவர் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்துவந்தார். அவருடைய சரவணா ஸ்டோரஸுக்கு விளம்பரங்களில் தொடர்ச்சியாக நடித்ததன் மூலம் இணையத்தில் ட்ரெண்ட்டானார். அவருடைய விளம்பரப் படங்களில் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டோரை நடித்துள்ளனர். நெட்டிசன்கள் லெஜண்ட் சரவணை வைத்து தொடர்ச்சியாக மீம்ஸ் போட்டு கலாய்த்துவந்தனர்.

    அதுகுறித்து கவலைக் கொள்ளாத சரவணா பெரும் பொருட் செலவில் லெஜண்ட் என்ற படத்தை தயாரித்து நடித்துவந்தார். இந்த படத்தை பல்வேறு விளம்பரப் படங்களை தயாரித்த ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். இவர்கள் கடைசியாக தமிழில் விசில் என்ற படத்தை இயக்கியிருந்தார்கள். அந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன.

    இந்தநிலையில், ’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.



    ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள 2 பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக ராய் லட்சுமியுடன், ஹீரோ சரவணன் போடும் குத்தாட்ட பாடலான வாடிவாசல், யூடியூபில் 13 மில்லியன்களை கடந்துள்ளது. வெளியாகியுள்ள ட்ரைலரில் பிரம்மாண்டமாக உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி