தாராளமாக என்னை கைது செய்யுங்கள்... ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன்

என்னை கைது செய்வது என்றால் தாராளமாக செய்யுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா என்று நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவர் மோசடி செய்து பட்டம் வென்றதாக தேர்வு குழுவிற்கு தெரியவர அவருக்கு கொடுத்த பட்டம் பறிக்கப்பட்டது . படவாய்பே இல்லாத மீரா மீதுன் தனக்கு பின்னால் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று காட்டிக்கொள்ள பணம் கொடுத்து எடுத்த விபரீத முயற்சிகள் தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் தான் மீராமிதுன் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ வெளியாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது ஆண் நம்பருடன் மீரா தோன்றும் அந்த வீடியோவில் குறுப்பிட்ட சமூத்தை பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் சாடியிருந்தார்.

  Also Read : 6 ஹீரோயின்கள், பிரபல நடிகரின் தயாரிப்பு... கெத்து காட்டும் குக் வித் கோமாளி அஸ்வின்!

  மீராமிதுனின் இந்த அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மீரா மிதுன் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தாராளமாக என்னை கைது செய்யுங்கள்... ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?  என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார். மேலும் ஆனால் , என்னை கைது செய்வது என்பது நடக்காது ; அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  Also Read : கணவர் தனுஷூக்கு பிறந்தநாள் - கீர்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்!

  ஏற்கனவே நடிகர்களை பற்றி அவதூராக பேசியது , கொலை மிரட்டல் விட்டது ,பண மோசடியில் ஈடுப்பட்டது உள்ளிட்ட வழக்குகளும் கேரள மக்களை அவதூறாக பேசிய வழக்கும் நிலுவையில் உள்ளது . துணை நடிகையாக வாய்ப்பு கிடைக்காத மீரா மிதுன் தனது யூடியூப் சேனல் பிரபலமடைவதற்காக தொடர்ந்து இப்படி பேசிவரும் பேச்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: