நம் ஆட்கள் மோசம்: அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!

தமிழ் கதாநாயகர்களில் அயர்ன் மேன் ஆக விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்

news18
Updated: April 5, 2019, 1:48 PM IST
நம் ஆட்கள் மோசம்: அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்!
அவெஞ்சர்ஸ்
news18
Updated: April 5, 2019, 1:48 PM IST
நம் ஆட்கள் எதை செய்தாலும் மதிக்கமாட்டார்கள். வெளியில் இருந்து யாராவது பாராட்டும் போது தான் ஆச்சர்யமாக பார்க்கிறோம் என்று ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தமிழில் வெளியான எந்திரன் படம் மூலம் ஈர்க்கப்பட்டது என இயக்குனர் ஜோ ரஸ்ஸோ கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரகுமான், ‘நம் ஆட்கள் எதைச் செய்தாலும் மதிக்கமாட்டார்கள். வெளியில் இருந்து யாராவது பாராட்டும் போது தான் ஆச்சர்யமாகப் பார்க்கிறோம். இந்தப் படத்தை செய்ய தொடங்கும் போது பயத்துடன் தான் ஆரம்பித்தேன். பாடல் பிடித்தவர்களுக்கு நன்றி, பிடிக்காதவர்களுக்கு அடுத்த முறை சிறப்பாகச் செய்து கொடுக்கிறேன்’ என்றார்.

வெளிநாட்டுப் படங்களில் கதைகள் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என வெளிப்படையாக சொல்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாக்களில் அவ்வாறு சொல்லப்படுவது இல்லையே என்ற கேள்விக்கு, 'நம் ஆட்கள் மோசம்' என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

மேலும் தமிழ் கதாநாயகர்களில் அயர்ன் மேன் ஆக விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

அயர்ன் மேன் மாதிரி பேசனும் ஷில்பா மாதிரி பேசக்கூடாது: விஜய்சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!


 

அயர்ன் மேனும் நான் தான் தானோஸும் நான்தான்: விஜய் சேதுபதி கலக்கல் பதில்!


Also watch






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...