ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரதமர் பகிர்ந்த வந்தே மாதரம்.. தமிழ் வரிகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன ஏஆர் ரஹ்மான்!

பிரதமர் பகிர்ந்த வந்தே மாதரம்.. தமிழ் வரிகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன ஏஆர் ரஹ்மான்!

ரஹ்மான் -பிரதமர் மோடி

ரஹ்மான் -பிரதமர் மோடி

எல்லையில் ராணுவ வீரர்கள் இந்தியில் பாடிய குறிப்பிட்ட வரிகளுக்கான தமிழ் வரிகளை ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்தாண்டு தீபாவளியை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் கொண்டாடினார். இன்று காலை கார்கில் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை வழங்கினார்.

    பின்னர் வீரர்கள் இசை கருவிகளை வாசித்து பாட்டு பாடி மகிழ்ந்தனர். இதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். அப்போது ஏஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை வீரர்கள் உற்சாகத்துடன் பாடிய நிலையில், வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் வந்தே மாதரம் பாடலை கைத்தட்டி ஆர்வத்துடன் பாடினார்.

    இந்நிலையில் இந்தப்பாடலை உருவாக்கி ஏஆர்ரகுமான், பிரதமர் மோடியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து '' இதயம் இதயம் துடிக்கின்றதே.. எங்கும் உன்போல் பாசம் இல்லை

    ஆதலால் உன் மடி தேடினேன்.. தாய் மண்ணே வணக்கம். Happy Diwali everyone'' என பதிவிட்டுள்ளார். வந்தே மாதரம் பாடலை இந்தியிலும் தமிழிலும் ரஹ்மான் உருவாக்கி இருப்பார். எல்லையில் ராணுவ வீரர்கள் இந்தியில் பாடிய குறிப்பிட்ட வரிகளுக்கான தமிழ் வரிகளை ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

    முன்னதாக தீபாவளி கொண்டாட்டத்தின்போது வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர், தொடர்ந்து வீரர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "நீங்கள் அனைவரும் எனது குடும்பமாக பல ஆண்டுகள் இருந்து வருகின்றீர்கள். உங்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெருமை. பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தமாகும்.

    இதையும் படிங்க: ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

    கார்கில் போர் அதற்கு சிறந்த உதாரணம். கார்கிலில் நமது படைகள் பயங்கரவாத்தை அழித்தது. அதற்கு சாட்சியாக நான் இன்னும் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. நாட்டின் உள்ளே மற்றும் வெளியே இருந்து செயல்படும் எதிரிகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்வதே இதற்கு காரணம்" எனப் பேசினார்.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: A.R.Rahman, Deepavali, Modi