அஜித் 60-க்கு இசையமைக்கிறேனா? ஏ.ஆர் ரஹ்மான் பதில்

news18
Updated: August 5, 2019, 12:54 PM IST
அஜித் 60-க்கு இசையமைக்கிறேனா? ஏ.ஆர் ரஹ்மான் பதில்
இசையமைப்பாளார் - ஏ.ஆர்.ரஹ்மான்
news18
Updated: August 5, 2019, 12:54 PM IST
அஜித்தின் 60 வது படத்துக்கு இசையமைப்பதாக தகவல்கள் வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார்.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.


இந்தப் படத்தை அடுத்து மீண்டும் அஜித் - போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. அஜித்தின் 60-வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் 60-வது படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “அஜித் 60 படத்துக்கு நான் இசையமைக்கவில்லை. ஏற்கெனவே பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி?

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...