விஜய்யின் குரல் வெறித்தனம்... சீக்ரெட் உடைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடியிருப்பதாக புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்தது படக்குழு. இதனால் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதோடு பாடல் எப்போது வெளியாகும் என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

news18-tamil
Updated: August 3, 2019, 5:57 PM IST
விஜய்யின் குரல் வெறித்தனம்... சீக்ரெட் உடைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான்
news18-tamil
Updated: August 3, 2019, 5:57 PM IST
விஜய்யின் குரல் வெறித்தனம் பாடலுக்கு நிறைய வித்தியாசங்களைக் கொடுத்துள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களை அடுத்து இயக்குநர் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் வரும் படம் பிகில். இந்தப் படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் விஜய்யின் பிறந்தநாளன்று படத்தின் ஃபோஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து சிங்கப் பெண்ணே பாடலும் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.


மேலும் இந்தப் படத்தில் வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடியிருப்பதாக புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்தது படக்குழு. இதனால் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதோடு பாடல் எப்போது வெளியாகும் என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் வெறித்தனம் பாடல் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வெறித்தனம் பாடலை நடிகர் விஜய் மிகச்சிறப்பாக பாடியுள்ளார். விஜய்யின் குரல் வெறித்தனம் பாடலுக்கு நிறைய வித்தியாசங்களைக் கொடுத்துள்ளது. இப்போது இதைத்தவிர என்னால் வேறு எதுவும் கூற முடியாது என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

Loading...

இதையடுத்து உங்களது சிங்கப்பெண் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கண்டிப்பாக என்னுடைய அம்மாதான். என்னுடைய மனைவி, மகள்கள், சகோதரிகள் ஆகியோரும் சிங்கப் பெண்கள்தான். அவர்கள் அனைவரும் உணர்வு ரீதியாகவும், ஆன்மீகத்திலும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தல VS தளபதி! திரைக்குள் நிகழ்ந்த போர்

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...