ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 67 படத்தில் அர்ஜூனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதி 67 படத்தில் அர்ஜூனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் - அர்ஜூன்

விஜய் - அர்ஜூன்

'தளபதி 67' 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விஜய்யின் 'வாரிசு' ரிலீசுக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், தளபதி 67 குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

'தளபதி 67' படத்தின் வில்லன்களில் ஒருவராக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும், மேலும் இந்த படத்தில் அவரது பாத்திரத்திற்காக அர்ஜுனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சஞ்சய் தத், கவுதம் மேனன், நிவின் பாலி ஆகியோரும் 'தளபதி 67' படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், இந்த ஆக்‌ஷன் படத்தை, பான்-இந்தியப் படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் படத்தில் முக்கிய வில்லனாக இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர்களின் சம்பளத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் கவலைப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 'தளபதி 67' 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலம் தளபதி 67 பட பட்ஜெட்டை மீட்டுள்ளனர்.

புதிய போஸ்டருடன் வாரிசு படத்தின் அட்டகாச அப்டேட்... மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மத்தியில் சென்னையில் தொடங்கும் என்றும், பின்னர் ஒரு பெரிய ஷெட்யூலில், படக்குழு காஷ்மீர் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதில் விஜய் ஒரு கேங்ஸ்டராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Thalapathy vijay