திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார்... நடிகை கொடுத்த புகாரில் பிரபல கேமராமேன் கைது

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை கொடுத்த புகாரில் பிரபல ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார்... நடிகை கொடுத்த புகாரில் பிரபல கேமராமேன் கைது
நடிகை சாய் சுதா | ஷ்யாம் கே.நாயுடு
  • Share this:
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை கொடுத்த புகாரில் பிரபல ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தவர் நடிகை சாய் சுதா. மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல கேமராமேன் ஷ்யாம் கே.நாயுடு மீது ஹைதராபாத் எஸ்.ஆர். நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


அந்த புகாரில் ஷ்யாம் கே.நாயுடு தன்னை கட்டாயப்படுத்தி காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறிவிட்டு தற்போது ஏமாற்றி வருவதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஷ்யாம் கே.நாயுடுவை கைது செய்து போலீசார் அவர் மீது பிணையில் வெளிவராத முடியபடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஒருவர் கொடுத்த புகாரில் ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நபருடன் ஷ்யாம் கே.நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து சுமார் 12 தெலுங்கு 12 பிரபலங்களிடம் 10 மணி நேரமாக சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஷ்யாம்.கே.நாயுடுவின் பெயர் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: அவரை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்: நெட்டிசன்களின் கேள்விக்கு யுவன்சங்கர் ராஜாவின் மனைவி பதிலடி..
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading