ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

அஜித்

அஜித்

தென்னிந்தியத் திரைப்படங்கள் பரந்த பார்வை கொண்டவை என்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அர்ஜுன் கபூர் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித்துடன் இணைந்து நடிக்க தான் விரும்புவதாக போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் ‘துணிவு’ படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்தார். ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்தார். அஜித் ஒரு பன்முகத் திறமை கொண்ட நடிகர் என்றும், நல்ல நண்பர் என்றும் போனி கபூர் முன்னதாக கூறினார். தற்போது, போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர், அஜித் குமாருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய அர்ஜுன் கபூர், எதிர்காலத்தில் அஜித்துடனும் மற்ற நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினார். அவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பிராந்திய மொழி படங்கள் இப்போது பரந்த பார்வையாளர்களை கவர்கிறது என்று குறிப்பிட்ட அவர், தென்னக நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்ற, சரியான தேவை இருக்க வேண்டும் என்றார்.

தென்னிந்தியத் திரைப்படங்கள் பரந்த பார்வை கொண்டவை என்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அர்ஜுன் கபூர் கூறினார். தனக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்றும் கூறினார். அஜித் குமார் மற்றும் தென்னிந்திய திரையுலகில் உள்ள மற்றவர்களுடன் போனி கபூர் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய அர்ஜுன் கபூர், தனது தந்தை எப்போதும் பிராந்திய திரைப்படங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith