முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒருவேள இருக்குமோ?! பெண்ணின் தோளில் சாய்ந்தபடி போஸ் கொடுத்த அர்ஜுன் தாஸ் - கவலையில் பெண் ரசிகைகள்

ஒருவேள இருக்குமோ?! பெண்ணின் தோளில் சாய்ந்தபடி போஸ் கொடுத்த அர்ஜுன் தாஸ் - கவலையில் பெண் ரசிகைகள்

அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாஸ்

ஒருவேளை இவரைத் தான் அர்ஜுன் தாஸ் காதலிக்கிறாரா என அவரது பெண் ரசிகைகள் கவலையில் இருந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அந்தப் படத்தில் லைஃப் டைம் செட்டில்மென்ட்ரா என மிரட்டலான குரலில் அர்ஜுன் தாஸ் பேசுவதே அவரது அடையாளமாகிப்போனது. மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான அந்தகாரம் படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது.

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற கப்பேலா படம் தெலுங்கு ரீமேக்கான புட்டபொம்மா படத்தில் முக்கிய வேடத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் 'அநீதி', 'அங்கமாலி டைரீஸ்' பட ஹிந்தி ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட படத்தை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதை மறைமுகமாக அறிவித்துள்ளாரா என அர்ஜுன் தாஸின் பெண் ரசிகைகள் கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் நண்பர்கள். எனக்கு நேற்று மாலையில் இருந்து மெசேஜ் செய்யும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், பதறாதீர்கள். அவர் உங்களுக்குத் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Arjun Das (@imarjundas)இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் பெண் ஒருவரின் தோளில் சாய்ந்து இருக்கும் படத்தை பகிர்ந்து, மதிய உணவுக்கு பிறகு குட்டித் தூக்கம். மாளவிகா மகிழ்ச்சியாக இல்லை என்பது நன்றாக தெரிகிறது. நாம் இதுபோல நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். படம் எடுத்தது தனது அம்மா என குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இவரைத் தான் அர்ஜுன் தாஸ் காதலிக்கிறாரா என அவரது பெண் ரசிகைகள் கவலையில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு சிலர் ''அது அவரது சகோதரி, அதனால் கவலைப்படத் தேவையில்லை'' என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

First published:

Tags: Arjun Doss