Arjun Das: விஜய்யை தொடர்ந்து கமலுடன் நடிக்கும் அர்ஜூன் தாஸ்?

அர்ஜூன் தாஸ்

டீஸருடன் விக்ரம் பட அறிவிப்பை வெளியிட்டு அமர்க்களமாக முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினர் லோகேஷ்.

  • Share this:
    இந்தியன் 2 படப்பிடிப்பு தயாரிப்பாளருக்கும், ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் முடங்கியுள்ள நிலையில், விக்ரம் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரமில் நடிகர்கள் தேர்வு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது.

    டீஸருடன் விக்ரம் பட அறிவிப்பை வெளியிட்டு அமர்க்களமாக முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினர். கமல் தேர்தல் பணிகளில் பிஸியானதால் விக்ரம் படவேலைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தேர்தலுக்கு மறுநாள் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், ஆரம்பிக்கலாங்களா? என கமெண்ட் போட்டிருந்தார்.
    படப்பிடிப்பு உடனே தொடங்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், படப்பிடிப்பு தொடங்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஆக்ஷன் படத்தில் கமலுடன் பகத் பாஸில் நடிக்கிறார். தன்னிடம் வில்லனாக நடிக்கக் கேட்டதாக விஜய் சேதுபதி கூறியிருந்தார். அவர் நடிக்கிறாரா என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தனது கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸை விக்ரம் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்துள்ளார். மலையாள நடிகர் ஆன்டணி வர்க்கீஸை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

    ஒரே ஷெட்யூலில் விக்ரம் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: