Home /News /entertainment /

Arjun Das: உங்களுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவன் - விஜய்-லோகேஷ் கனகராஜ் குறித்து அர்ஜுன் தாஸ் உருக்கம்!

Arjun Das: உங்களுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவன் - விஜய்-லோகேஷ் கனகராஜ் குறித்து அர்ஜுன் தாஸ் உருக்கம்!

அர்ஜுன் தாஸ் - விஜய் - லோகேஷ்

அர்ஜுன் தாஸ் - விஜய் - லோகேஷ்

மாஸ்டரில் நடிக்காமல் போயிருந்தால், நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேனா எனத் தெரியவில்லை.

    தான் இந்தியில் அறிமுகமாவதற்கு மாஸ்டர் திரைப்படம் தான் காரணம் என நடிகர் விஜய்க்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

    அர்ஜுன் தாஸ் தனது தனித்துவமான குரலின் மூலம் ரசிகர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்துள்ளார். அதோடு கார்த்தி நடித்த 'கைதி' படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரம் அவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது. இதையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். வில்லனாக அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு சமீபத்தில் வெளியான கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்.

    தவிர மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் அர்ஜுன் தாஸ். இந்தப் படத்தை கே.டி.கருப்புதுரை படத்தை இயக்கிய மதுமிதா இயக்குகிறார்.

    விஜய்யின் அரபிக் குத்து பாடலை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

    இந்நிலையில் தனது பாலிவுட் வாய்ப்புக்கு காரணமாக இருக்கும் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் குழுவினருக்கு தனது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ள அர்ஜுன், இது குறித்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில், “எனது முதல் இந்திப் படம். எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. உணர்வுகள் கொப்பளிக்கின்றன. முதலில் லோகேஷ் சாருக்கும், விஜய் சாருக்கும் பெரிய நன்றி. இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், உங்கள் இருவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். நான் ஏன் இவர்களுக்கு நன்றி சொல்கிறேன், என உங்களில் பலரும் ஆச்சர்யப்படலாம்.



    உண்மை என்னவென்றால், மாஸ்டரில் நடிக்காமல் போயிருந்தால், நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேனா எனத் தெரியவில்லை. அதனால் மீண்டும் லோகேஷ் சார், விஜய் சார் மற்றும் மாஸ்டர் குழுவினருக்கு நன்றி. இந்தப் படத்தில் (இந்திப்படம்) கையெழுத்திட்டதும், அதைப்பற்றி என் பெற்றோர், விஜய் சார், லோகேஷ் சார் மற்றும் விக்னா சாரிடம் மட்டுமே கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி