ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் த்ரில்லர் திரைப்படம்...!

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் த்ரில்லர் திரைப்படம்...!

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்

அர்ஜுன் என்றதும் அடிதடிதான் நினைவுவரும். ஆனால், இந்தப் படத்தில் ஆக்ஷனை குறைத்து புத்திசாலித்தனமாக முடிச்சுகளை அவிழ்க்கும் கதாபாத்திரம் அர்ஜுனுக்கு தரப்பட்டிருக்கிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிகர்களில் விஜய் சேதுபதி என்றால், நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ். வாரம் இரண்டு புதுப்படங்கள் இவர்கள் பெயரில் அறிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே அரைடஜனுக்கும் மேல் படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

தினேஷ் லக்ஷ்மணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் ஜோடிகள் அல்ல. அர்ஜுன் விசாரணை அதிகாரியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தரும் ஆசிரியராகவும் வருகிறார்கள். இந்த குழந்தைகள் பின்னணியில் இந்தத் த்ரில்லர் கதையை தினேஷ் லக்ஷ்மணன் எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அர்ஜுன் என்றதும் அடிதடிதான் நினைவுவரும். ஆனால், இந்தப் படத்தில் ஆக்ஷனை குறைத்து புத்திசாலித்தனமாக முடிச்சுகளை அவிழ்க்கும் கதாபாத்திரம் அர்ஜுனுக்கு தரப்பட்டிருக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பற்றி இந்திய சினிமாவில் அரிதாகவே படங்கள் வந்துள்ளன. அந்த குழந்தைகளின் கல்விப் பின்புலத்தில் ஒரு த்ரில்லர் என்பது முற்றிலும் புதுமை.

Also read... ரன்வீர் சிங், ராஜமௌலி கலந்து கொண்ட ஷங்கர், ராம் சரண் படத்தின் பூஜை!

கதையில் இருக்கும் புதுமையை படத்திலும் இயக்குனரால் கடத்த முயன்றால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படம் உத்தரவாதம்.

First published:

Tags: Actor Arjun, Actress Aishwarya Rajesh