எங்க வீட்டு மாப்பிள்ளை 2-க்கு ரெடியா?... அலறிய ஆர்யா

முன்னதாக நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் பரவின.

எங்க வீட்டு மாப்பிள்ளை 2-க்கு ரெடியா?... அலறிய ஆர்யா
நடிகர் ஆர்யா
  • News18
  • Last Updated: January 29, 2019, 7:21 PM IST
  • Share this:
நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் சாக்லேட் பாயாக பார்க்கப்பட்டார். அதன்பின் வட்டாரம், பட்டியல் உள்ளிட்ட படங்களில் ரவுடியாக நடித்து ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து, பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படம் ஆர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் கதாநாயகியாக நடித்த சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியையே சந்தித்து வந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ பதிவுக்கு காமெடி நடிகர் சதீஷ், ‘இல்லையே.. பார்த்தா எங்க வீட்டு மாப்பிள்ளை 2-ம் பாகத்திற்கு ரெடி ஆகர மாதிரி இருக்கே’ என்று பதிலளித்துள்ளார்சதீஷின் பதிவுக்கு ஆர்யா அளித்த பதில் இதோAlso watch:

First published: January 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading