அதிக திரையரங்குகளில் ‘பிகில்’ வெளியாகும் - அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பால் பரபரப்பு!

அதிக திரையரங்குகளில் ‘பிகில்’ வெளியாகும் - அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பால் பரபரப்பு!
பிகில் பட போஸ்டர் | அர்ச்சனா கல்பாத்தி
  • News18
  • Last Updated: August 29, 2019, 12:43 PM IST
  • Share this:
பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்துள்ள அர்ச்சனா கல்பாத்தி புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆவதை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.மேலும் விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், பிகில் படத்தின் அடுத்த அப்டேட் வெறித்தனம் விரைவில் வெளிவரும் என்றும் செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தினமும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Loading...

மேலும் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், ஸ்கிரீன் சீன் நிறுவனம் பிகில் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு புதிய சாதனையை ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ள அர்ச்சனா, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.ஏற்கெனவே தீபாவளியன்று விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக திரையரங்குகளில் பிகில் வெளிவரும் என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க: விஜய்க்கு எதிராக களத்தில் குதிக்கும் கார்த்தி!

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...