‘தளபதி 63’ அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு படக்குழு பதில்!

news18
Updated: June 18, 2019, 12:45 PM IST
‘தளபதி 63’ அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு படக்குழு பதில்!
தளபதி 63
news18
Updated: June 18, 2019, 12:45 PM IST
‘தளபதி 63’ குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே படம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.Loading...

அந்தவகையில் சமூகவலைதளங்களில் அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நீங்கள் மறந்திருப்பீர்கள், தயாரிப்பாளரிடமிருந்து படத்தைப் பற்றிய அப்டேட் பெற்றுத் தருவது நானாகத்தான் இருப்பேன். ‘தளபதி 63’ படம் குறித்த அப்டேட் சரியான நேரத்தில் கிடைக்கும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் இரவுபகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...