அரவிந்த்சாமி - ஆர்யா கூட்டணியில் புதிய படம்!

ஆர்யா - அரவிந்த் சாமி

ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் இணைந்து ஆகஸ்ட் சினிமாவை நிர்வகித்து வருகின்றனர்.

 • Share this:
  ஆர்யா தயாரிக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். முக்கியமான மலையாள நடிகர் ஒருவரும் இந்தப் படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆர்யா தனது ’தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களை தயாரித்துள்ளார். மலையாளத்தில் ஆகஸ்ட் சினிமா என்ற பேனரில் சந்தோஷ் சிவன், பிருத்விராஜ், ஆர்யா, ஷாஜி நடேசன் ஆகியோர் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளனர். தற்போது அந்த நிறுவனத்தில் பிருத்விராஜ் இல்லை. ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் இணைந்து ஆகஸ்ட் சினிமாவை நிர்வகித்து வருகின்றனர்.

  ஆகஸ்ட் சினிமா, டபுள் பேரல், டார்வின்டெ பரிணாமம், அனுராகக்கருக்கின் வெள்ளம், தி க்ரேட் ஃபாதர், கலி போன்ற முக்கியமான படங்களை மலையாளத்தில் தயாரித்துள்ளது. தற்போது அரவிந்த்சாமி நடிப்பில் தமிழ், மலையாளத்தில் ஒரு படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் குஞ்சாகா போபனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். பெலினி என்பவர் படத்தை இயக்குகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விரைவில் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: