'எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை...' நடிகை வரலட்சுமி ஆவேசம்

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

'எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை...' நடிகை வரலட்சுமி ஆவேசம்
நடிகை வரலட்சுமி சரத்குமார்
  • News18
  • Last Updated: July 2, 2020, 8:55 PM IST
  • Share this:
அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்.
படிக்க: Fact Check | கொரோனாவால் இறந்தவர்களின் உடல் ஹெலிகாப்டரிலிருந்து கடலில் வீசப்பட்டதா?


படிக்க: பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
முன்னதாக சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை சட்டம் தண்டிக்கும் என்று முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading