முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விமர்சனங்களை கடந்து லாபத்தை தந்த அரண்மனை 3...!

விமர்சனங்களை கடந்து லாபத்தை தந்த அரண்மனை 3...!

அரண்மனை 3

அரண்மனை 3

டாக்டர் படம் ஒருபக்கம் வசூலை குவிக்க, அரண்மனை 3 சத்தமில்லாமல் முதல் நான்கு தினங்களில் சுமார் 15 கோடிகளை தமிழகத்தில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

  • Last Updated :

சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை தந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவுக்காட்சியை எதற்கு இரவில் கண் விழித்து எடுக்க வேண்டும் என்று பகலில் பில்டர் உபயோகித்து எடுத்து, இரவு போல் காட்டுகிறவர் சுந்தர் சி. அந்தளவு தொழில்பக்தி உள்ளவர். அரண்மனை, அரண்மனை 2 படங்கள் ஓடியதால், தனது மனைவி குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் அரண்மனை 3 படத்தை இயக்கி நடித்தார். ஆர்யாதான் நாயகன். ராஷி கண்ணா நாயகி. ஆன்ட்ரியா, மனோபாலா, சூரி, விவேக் என பலரும் நடித்திருந்தனர்.

ஏற்கனவே பலமுறை எடுத்த கதையை மீண்டும் எடுத்து, காமெடி பூசி அளித்திருந்தார். படத்தை விமர்சகர்கள் கழுவி ஊற்றினர். பேய் படம் என்றால், லாஜிக் பார்க்காமல் சிரிக்க வருகிற பேமிலி ஆடியன்ஸை மனதில் வைத்து எடுத்த படம் என்பதால், விமர்சகர்களை தாண்டி பேய் பட ரசிகர்கள் படத்தை திரையரங்கில் வந்து பார்த்தனர். டாக்டர் படம் ஒருபக்கம் வசூலை குவிக்க, அரண்மனை 3 சத்தமில்லாமல் முதல் நான்கு தினங்களில் சுமார் 15 கோடிகளை தமிழகத்தில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

Also read... கேரளாவில் சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளியீட்டு தேதியில் மாற்றம்!

திங்கள், செவ்வாய் விடுமுறையில் மேலும் சில கோடிகளைச் சேர்த்து பாதுகாப்பாக கரையேறியிருக்கிறது படம். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம். இவர்கள்தான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை பெற்றிருந்தனர். படத்தின் சேட்டிலைட் உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கு

top videos

    ஆக, சுந்தர் சி.யின் அரண்மனை பேய் இந்தமுறையும் அவருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. ஆகவே அடுத்தப் பாகத்தை எடுக்காமல் விடமாட்டார். நல்ல பேய் படங்கள் வந்து ரசிகர்கள் திருந்தினால் மட்டுமே காஞ்சனா, அரண்மனை பேய்களிடமிருந்து தமிழ் ரசிகர்கள் மீள முடியும்.

    First published:

    Tags: Actor Arya, Sundar.C