நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் பாடலான அரபிக் குத்து தற்போது 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து தற்போது சாதனைப் படைத்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த ஏப்ரல் மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் விஜய் உளவுத்துறை முன்னாள் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளிவந்த பின்னர் கலவை விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் பாதிப்பை சந்திக்கவில்லை.
படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த நிலையில் பலவீனமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியில் படம் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆகியுள்ளன. படத்தில் ஜாலியோ ஜிம்கானா, அரபிக் குத்து ஆகிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அரபிக் குத்து பாடல் தற்போது 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் முன்னிலை வகுக்கிறது.
மேலும், பீஸ்ட் படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.