Home /News /entertainment /

உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்!

உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் பட பாடல்!

விஜய்

விஜய்

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

  • News18
  • Last Updated :
    நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் உலக அளவில் முதலிடத்தி பிடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்த பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

    பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து பாடலுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நடனமாடி அதனை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டகிராமில் வெளியிட்டனர். இதையடுத்து அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூ-ட்யூபில் 448 மில்லியன் பார்வைகளையும், பாடல் வீடியோ 158 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.

    Also read... 12 வருடங்களுக்கு பிறகு உங்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி அண்ணா - உதயநிதி குறித்து சிம்பு வெளியிட்ட ட்வீட்!

    இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இத்தனை மாதங்களுக்கு பிறகும் அரபிக் குத்து பாடல் சாதனை படைத்திருக்கிறது. ஆம், யூடியூப்-ல் தளத்தில் அரபிக் குத்து வீடியோ உலகளவில் No.1 மியூசிக் வீடியோ என சாதனை படைத்திருக்கிறது.



    இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி