முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: 400 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த பீஸ்ட் பட பாடல்!

WATCH: 400 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த பீஸ்ட் பட பாடல்!

அரபிக் குத்து

அரபிக் குத்து

Arabic Kuthu - Video Song | விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் தற்போது 40 கோடி பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் சாதனைப் படைத்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் நாயகன் விஜய் உளவுத்துறை முன்னாள் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளிவந்த பின்னர் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் பாதிப்பை சந்திக்கவில்லை.

இந்தப் படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த நிலையில் பலவீனமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியில் படம் தோல்வியை சந்தித்தது. எனினும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆகியுள்ளன. படத்தில் ஜாலியோ ஜிம்கானா, அரபிக் குத்து ஆகிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் தற்போது 40 கோடி பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.  அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் பாடி இருந்தனர்.

' isDesktop="true" id="898038" youtubeid="KUN5Uf9mObQ" category="cinema">

நன்றி: Sun TV.

First published:

Tags: Actor Vijay, Anirudh, Beast, Movie Video Songs, Sivakarthikeyan