நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.
காசு வேண்டாம்... என் அண்ணன் சிவாஜிக்காக பாடுகிறேன்!- லதா மங்கேஷ்கர் குறித்து பிரபு!
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இதனால் உற்சாகமான ரசிகர்கள் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
#BeastFirstSingle - #ArabicKuthuOnFeb14
Wait.. #ArabicKuthu? 🤨 Appadina? Therinjika indha link ah click pannunga:
▶ https://t.co/dSqP98cWt1@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast
— Sun Pictures (@sunpictures) February 7, 2022
ஆரம்பித்த வேகத்திலேயே பிரபல சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட விஜய் டிவி... காரணம் இது தான்!
#ArabicKuthu from Feb 14 🕺💃
Get ready for the #BeastFirstSingle blast 🥳🥳🥳https://t.co/H339ibJX6b
Thalapathy @actorvijay sir 🔥🔥🔥@Nelsondilpkumar directorial 💯💯💯@Siva_Kartikeyan 😍😍😍@sunpictures @hegdepooja @manojdft @Nirmalcuts @anbariv #Beast
— Anirudh Ravichander (@anirudhofficial) February 7, 2022
இதையடுத்து பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் அரபிக் குத்து என்ற முதல் சிங்கிளுக்கான டிஸ்கஷன் போவது போல காட்டப்படுகிறது. அதன் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஃபோனில் விஜய்யை தொடர்பு கொள்ளும் அனிருத், பாடல் குறித்து பகிர்ந்துக் கொள்கிறார். அதில் விஜய் மிக இயல்பாக பேசுகிறார். இது நிச்சயம் விஜய் ரசிகர்களை கவரும்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Thalapathy vijay