Home /News /entertainment /

Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

பீஸ்ட் அரபிக் குத்து

பீஸ்ட் அரபிக் குத்து

Arabic Kuthu: இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய்.

    நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.



    இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் அந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.

    Valentine’s Day 2022: காதலில் திளைத்து பின் பிரிந்து போன காதல் ஜோடிகள்!



    Valentine's Day 2022: காதலர்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ் ரொமாண்டிக் திரைப்படங்கள்!

    இதையடுத்து தற்போது அரபிக் குத்து பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரபிக் குத்து பாடலை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். இதே போல, 2020 காதலர் தினத்துக்கு விஜய்யின் மாஸ்டர் படத்திலிருந்து ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Sun pictures, Thalapathy vijay

    அடுத்த செய்தி