ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''அசாத்தியமானது''.. முதல் ஆளாய் வந்து RRR படக்குழுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்!

''அசாத்தியமானது''.. முதல் ஆளாய் வந்து RRR படக்குழுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்!

எம்.எம்.கீரவாணி - ஏ.ஆர்.ரஹ்மான்

எம்.எம்.கீரவாணி - ஏ.ஆர்.ரஹ்மான்

கோல்டன் குளோப் வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதே பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகுபலி, பாகுபலி 2 என்ற பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு ஹீரோக்களான ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப் படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

ஆஸ்கார் 2023 விருதுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக இரண்டு பரிந்துரைகளைப் பெற்றிருந்தது. இந் நிலையில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஓரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. விருதினை படத்தின் இடையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார். முன்னதாக இந்திய சார்பாக ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஜெய்ஹோ பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதினை பெற்றிருந்தார். கோல்டன் குளோப் வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அதே பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், '' அசாத்தியமானது,  இது அனைவருக்குமான முன்னுதாரணம். அனைத்து இந்தியர்கள் சார்பாகவும், உங்கள் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகள் கீரவாணி.  இயக்குநர் ராஜமௌலி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக, லாஸ் ஏஞ்சல்ஸின் சீன திரையரங்கில் ஆர்ஆர்ஆர் திரையிடப்படுகிறது. அங்கு 98 வினாடிகளில் மொத்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இதனை பியாண்ட் ஃபெஸ்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பாஃப்டா விருதுப் போட்டிக்கான முதற்கட்ட பரிந்துரைப் பட்டியலில், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருதுகள் கருதப்படுகின்றன. இந்த விருது சிறந்த நடிகர், நடிகை, வெளிநாட்டுப் படம் என மொத்தம் 25 பிரிவுகளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், இறுதிப் போட்டிக்கு 5 படங்கள் தேர்வுசெய்யப்படும் எனவும் கூறப்படுகின்றன.

First published:

Tags: A.R.Rahman, Rajamouli, Ram Charan