ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாபா படத்திற்கு புதிய இசையை சேர்க்க ஏ.ஆர். ரகுமான் ஆர்வம்… ரஜினி பிறந்த நாளையொட்டி படம் வெளியாகிறது…

பாபா படத்திற்கு புதிய இசையை சேர்க்க ஏ.ஆர். ரகுமான் ஆர்வம்… ரஜினி பிறந்த நாளையொட்டி படம் வெளியாகிறது…

பாபா படத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசும் ரஜினிகாந்த்.

பாபா படத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசும் ரஜினிகாந்த்.

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும் சில இடங்களில் பாபா படம் திரையிட வாய்ப்பு உள்ளதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினிகாந்த் நடிப்பில் பாபா திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ள நிலையில் அதன் முன்னோட்டத்தை முதலில் பார்க்க ஏ.ஆர்.ரகுமான் கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் படம் மீண்டும் ரிலீஸாக உள்ள நிலையில், புதிய இசையை படத்தில் சேர்ப்பதற்கு ஆர்வமாக உள்ளார் ரகுமான்.

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தோல்வியை தழுவியது. இருந்தாலும் ரஜினிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அது இருந்து வந்தது.

இந்த நிலையில் பாபா திரைப்படத்தை மீண்டும் வெளியிட ரஜினிகாந்த் திட்டமிட்டார். அதற்கான ஆலோசனையின் சுரேஸ் கிருஷ்ணாவுடன் ஈடுபட்டிருந்தார்.

சென்சார் சான்றிதழை பெற்றது நயன்தாராவின் கோல்ட் திரைப்படம்… டிசம்பர் 1ஆம்தேதி ரிலீஸ்…

இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிஜிட்டல் பதிவு செய்யப்பட்ட பாபா திரைப்படம் வெளியாக உள்ளது. முதலில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஒரு காட்சி மட்டுமே திரையிட திட்டமிட்டனர்.

ஆனால் தற்போது பாபா படத்தின் மறு வெளியிட்டுருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்த பட குழுவினர், படத்தில் புதிய காட்சிகளை சேர்க்கவும் திட்டமிட்டனர். அதன்படி அந்த காட்சிகள் சேர்க்கப்பட்டு, ரஜினிகாந்த் சமீபத்தில் அதற்கு டப்பிங் பேசியிருந்தார்.

35 வருடங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியான கமலின் பான் இந்தியா திரைப்படம்…

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அந்த படத்தின் முன்னோட்டத்தை முதலில் பார்ப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் படத்தில் இசையை மெருகேற்ற முடியுமா எனவும் ஆலோசிக்கிறார் என கூறப்படுகிறது.

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும் சில இடங்களில் பாபா படம் திரையிட வாய்ப்பு உள்ளதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: AR Rahman, Kollywood