இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறினார்.
மேலும் தில் பேச்சாரா படத்தின் இயக்குநர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என சிலர் கூறியதாகவும், அவரை தடுத்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு, திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது.
அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பார் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொண்டே கூறுவார்.
Also Read : பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பயப்படுகிறார்கள் - பார்த்திபன் பளார் பேட்டி
பாலிவுட் சினிமாத்துறையினர் மீது ஏ.ஆர்.ரகுமான் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் ரசிகர்கள் இந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.