ஏ.ஆர்.ரஹ்மான் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வட அமெரிக்காவின் முக்கியமான 12 இடங்களில் இசைக் கச்சேரி நடத்துகிறார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதுடன் உலகமெங்கும் இசைக் கச்சேரியும் அவ்வப்போது நடத்தி வருகிறார். ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தியர்கள் அல்லாத வெளிநாட்டினரும் ரஹ்மானின் இசைக் கச்சேரியில் ஆர்வம் காட்டுகின்றனர். மார்ச் மாதம் இளையராஜா சென்னையில் இசைக் கச்சேரி நடத்துகிறார். ஜூலை, ஆகஸ்டில் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் நடத்துகின்றார்.
ஜூலை 17ஆம் தேதி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தனது லைவ் கான்செர்டை ஆரம்பிக்கிறார் ரஹ்மான். அவரது இசை சுற்றுப்பயணத்தின் விபரம் வருமாறு...
17 July - Seattle
23 July - Oakland
24 July - Los Angeles
28 July - Dallas
29 July - Austin
31 July - Houston
5 August - Hollywood
6 August - Tampa
7 August - Atlanta
12 August - Newark
13 August - Washington
14 August - Durham
அமெரிக்கவாழ் இந்தியர்கள் ரஹ்மானின் லைவ் கான்செர்டில் கலந்து கொள்ள இது அரிய வாய்ப்பு.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.