சுஷாந்த் சிங்குக்கு இசையஞ்சலி - ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பிரபல பாடகர்கள் பங்கேற்பு

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் சுஷாந்த்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்கிறார்.

 • Share this:
  கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் 14-ம் தேதி மும்பையில் அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின.

  சுஷாந்த் சிங் கடைசியாக நடித்திருக்கும் படம் ‘தில் பேச்சாரா’. ஜான் க்ரீன் எழுதிய "தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்ற நாவலை மையமாகக் கொண்டு முகேஷ் சாப்ரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

  ஜூலை 24-ம் தேதி இத்திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சுஷாந்துக்காக இத்திரைப்படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுஷாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்கிறார். அவருடன் ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், மோஹித் சவுகான், ஹிரிடே கட்டானி, சுனிதி சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நாளை மதியம் 12 மணி முதல் இந்நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் காணலாம்.
  Published by:Sheik Hanifah
  First published: